Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

Advertiesment
Empuraan

Mahendran

, செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (12:46 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ படம் குறித்த சர்ச்சை இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்டது. இதனை அடுத்து, அமளியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படத்தில், குஜராத் கலவரம் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்காக வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மோகன்லால் வருத்தம் தெரிவித்து, அந்த காட்சிகளை நீக்குவதாக அறிவித்தார்.
 
இந்த நிலையில், ‘எம்புரான்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக மோகன்லாலை தாக்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என இடதுசாரி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கினர். மாநிலங்களவையில், அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவையை விட்டு இடதுசாரி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
இதனை தொடர்ந்து, மக்களவையிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நிலையில், சபாநாயகர் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?