Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லியே கேப்டனாக நீடிப்பது யார் எடுத்த முடிவு – சுனில் கவாஸ்கர் காட்டம் !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (14:10 IST)
இந்திய அணியின் கேப்டனாகக் கோஹ்லியே தொடர்வது என்பது யார் எடுத்த முடிவு என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்ட போது அவர் உலகக்கோப்பை தொடர்வரை செயல்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பைக்குப் பின் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீண்டும் கோலியே கேப்டனாக நியமிக்கபட்டாரா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு கோஹ்லியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘விராட் கோலி கேப்டனாக அணிக்கு தொடர்வது அவரின் விருப்பதின் அடிப்படையில் இருக்கிறதா அல்லது தேர்வுக்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் கோலி தொடர்கிறாரா ?. மீண்டும் கோலியை கேப்டனாக நியமித்து இருக்கிறோம் என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி சொல்வதற்கு தேர்வுக்குழுவினருக்கு 5 நிமிடம் கூட கிடைக்கவில்லையா?. சரியாக செயல்படாத தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அணியாக சரியாக செயல்படவில்லை என்பதற்காக கோலி மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments