Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

Mahendran
திங்கள், 9 ஜூன் 2025 (10:14 IST)
சிஎஸ்கே, மும்பை போல் ஏற்கனவே சில முறை RCB கோப்பையை கைப்பற்றி இருந்தால், அதன் ரசிகர்களுக்கு இவ்வளவு பெரிய கொண்டாட்ட ஆர்வம் ஏற்பட்டு இருக்காது. 18 ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றியை ருசித்ததால்தான், அந்த ரசிகர்கள் கட்டுக்கடக்காமல் கூடிய கூட்டத்தால் இந்த துயர சம்பவம் நடந்தது என்று சுனில் கவாஸ்கர், ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 
பல வருட மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, ஆர்சிபி வீரர்கள் ஒரே நாளில்  பெற்றிருந்தார்கள் என்றும்; அதனால்தான் RCB வீரர்களை ஒரே ஒரு நிமிடம் பார்க்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் குவிந்ததாகவும், 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு கிடைத்த இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி ஏற்கனவே சில ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தால், இவ்வளவு பெரிய உணர்ச்சிமயமான வெள்ளம் உருவாகி இருக்காது என்றும், மற்ற அணிகள் ஐபிஎல் வெற்றியை சாதாரணமாக எடுத்துக் கொண்டதற்கும், ஆர்சிபி ரசிகர்கள் அதை மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடியதற்கும் உள்ள வேறுபாடு இதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இனி இதைப் பற்றி பேசி எதுவும் செய்ய முடியாது; உயிரிழந்தவர்கள் திரும்ப வரப்போவதில்லை. இனிமேல், இது போன்ற ஒரு விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments