Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபிஃபா, ஆசிய கால்பந்து தகுதி போட்டிகள் ஒத்திவைப்பு! – கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (15:45 IST)
கொரோனா காரணமாக ஃபிஃபா மற்றும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் தகுதி கால்பந்து ஆட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா கால்பந்து போட்டிகள் 2022ம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2023ல் சீனாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி பெற கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தகுதி ஆட்டங்கள் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பினால் அவை ஒத்தி வைக்கப்பட்டன.

அதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளில் இருந்து பல நாடுகள் முழுமையாக வெளிவராத சூழலில் அக்டோபரில் தகுதி சுற்று ஆட்டங்களை நடத்துவது இயலாத காரியமென முடிவெடுத்துள்ள கால்பந்து கூட்டமைப்பு தகுதி ஆட்டங்களை மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான தகுதி ஆட்டங்கள் 2021ல் நடைபெறும் என கூறியுள்ள கால்பந்து கூட்டமைப்பு மாதம், தேதி உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஸ்க்க நான் எடுக்குறேன்… நீங்க களத்துல இருந்தா போதும் – கோலியோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்!

திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்!

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!

ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !

கோபித்துக்கொண்ட கே எல் ராகுல்… ஆட்டம் முடிந்ததும் சமாதானப்படுத்திய கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments