Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

90ஸ் கிட்ஸின் ரெஸ்லிங் நாயகன் கமலா இறந்தார்! – சோகத்தில் ரசிகர்கள்!

Advertiesment
90ஸ் கிட்ஸின் ரெஸ்லிங் நாயகன் கமலா இறந்தார்! – சோகத்தில் ரசிகர்கள்!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:05 IST)
1990களில் இளைஞர்களின் மனம் கவர்ந்த மல்யுத்த வீரர்களில் ஒருவரான கமலா உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1984ல் ரெஸ்லிங் உலகில் அறிமுகமானவர் ஜேம்ஸ் ஹாரிஸ். சண்டை கூண்டிற்குள் வழங்கும் பெயர்களில் கமலா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஜேம்ஸ் உகாண்டா நாட்டை சேர்ந்தவர். 1980 முதலாக சுமார் 20 வருட காலங்கள் ரெஸ்லிங் விளையாட்டில் ஈடுப்பட்ட அவரை ரெஸ்லிங் வீரர்கள் பலர் “உகாண்டாவின் பூதம்” என்றே அழைப்பது வழக்கம். ரெஸ்லிங் உலகின் மிகெப்பரும் ஆட்களாக கருதப்படும் ஹல்க் ஹோகன், அண்டர்டேக்கர் போன்றவர்களோடு மோதியவர்.

தற்போது 70 வயதாகும் கமலா உடல்நல குறைவால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு முன்னாள், இந்நாள் ரெஸ்லிங் சாம்பியன் வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசுவாசம் ரொம்ப முக்கியம் – கோலியின் டிவிட்டால் ஏற்பட்ட குழப்பம்!