Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 செமிபைனல், 7 பைனல், 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (06:30 IST)
கடந்த 1975ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஆஸ்திரேலியா அணிதான் அதிகமுறை கோப்பையை வென்றுள்ளது. இந்த அணி கடந்த 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 என ஐந்து முறை கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமை பெற்றுள்ளது அதிலும்  1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இது எந்த அணியும் செய்யாத சாதனை ஆகும்
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் படுமோசமான தோல்வியை ஆஸ்திரேலியா அணி பெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்று தோல்வி அடைவது என்பது ஆஸ்திரேலியா அணிக்கு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இவர் நேற்று பெயர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் 27 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் கிளன் மெக்ரத் 26 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments