Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது முறையாக இறுதி போட்டியில் இங்கிலாந்து! கோப்பையை வெல்லுமா?

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (06:05 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியிடமும், 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியிடமும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியிடமும் தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது இங்கிலாந்து
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து, வரும் ஞாயிறு அன்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து இங்கிலாந்து நாட்டின் முன்னணி சேனல்களான 'சேனல் 4 மற்றும் 'மோர் 4' ஆகிய இரண்டு சேனல்களும், போட்டியை இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள்… கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments