Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டோனி என்ன சூப்பர்மேனா? கடுப்பான ரசிகர்கள்

Advertiesment
டோனி என்ன சூப்பர்மேனா? கடுப்பான ரசிகர்கள்
, வியாழன், 11 ஜூலை 2019 (17:29 IST)
நேற்று நடந்த உலக கோப்பை அரையிறுதியில் தோனி சிறப்பாக விளையாடியிருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும் என சிலஎ தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவிக்க அது பெரும் சண்டைக்கு காரணமாக அமைந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் முன்னணி பேட்டிங் வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மூன்று பேரும் ஒரே ஒரு ரன்னிலேயே அவுட்டாகிவிட்டனர். சிறிய ரன் வித்தியாசத்தில் தோற்றோம் என்றாவது இருக்கட்டுமே என களமிறங்கிய ஜடேஜா, தோனி கூட்டணி ஓரளவு கணிசமான ரன்களை பெற்றது. ஜடேஜா 77 ரன்களில் அவுட் ஆனார். தோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். நேற்றைய தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஆனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் குறை சொல்லும் சிலர் “தோனி ஒழுங்காக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்” என கருத்து தெரிவிக்க, கடுப்பான தோனி ரசிகர்கள் “தோனி என்ன சூப்பர்மேனா? எல்லா நேரத்திலும் அணியை காப்பாற்றி கொண்டிருக்க! ஏழாவதாக இறங்கி அவர் இவ்வளவு ரன் எடுத்ததே மிக சவாலான விஷயம். முன்னதாக அவுட் ஆன ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை கேளுங்கள். 2011 போல கடைசி நேரத்தில் தோனி சிக்ஸ் அடித்து காப்பாற்றுவார் என்று நினைத்து ஏழாவது இடத்தில் வைத்தது கோஹ்லியின் தவறு” என ஆவேசமாக பேசியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை கண்கலங்கவைத்த தோனி: வைரலாகும் ரசிகர்களின் கண்ணீர் வீடியோ