ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பர்ஹான் 58 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இந்தியாவின் பந்துவீச்சில், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இந்திய அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.