Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயவுசெய்து ரிட்டயர் ஆகாதீங்க: தோனிக்கு 89 வயது பாடகி வேண்டுகோள்!

Advertiesment
தயவுசெய்து ரிட்டயர் ஆகாதீங்க: தோனிக்கு 89 வயது பாடகி வேண்டுகோள்!
, வியாழன், 11 ஜூலை 2019 (18:06 IST)
நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி களத்தில் இருக்கும் வரை இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அவர் எதிர்பாராத வகையில் ரன் அவுட் செய்யப்பட்டதால் இந்தியாவின் வெற்றி கைநழுவி போனது. 
 
இந்த நிலையில் தோனியின் போராட்ட குணத்திற்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும் ஒருசிலர் தோனியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகியும், பாரத ரத்னா விருது வென்ற பாடகியுமான 89 வயது லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டரில் தோனி இப்போதைக்கு ஓய்வு பெறக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தோனி ஓய்வு பெற இருப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் தனக்கு கவலையை அளிப்பதாகவும், தோனியின் கிரிக்கெட் சேவை இன்னும் நாட்டிற்கு தேவையென்றும், தயவுசெய்து அவர் ஓய்வு முடிவை தற்போது அறிவிக்கக்கூடாது என்றும் லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
webdunia
உலகக்கோப்பை கைநழுவி போனாலும் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் இன்னும் சில காலத்திற்கு தேவை என்பதே பலருடைய கருத்தாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோனி என்ன சூப்பர்மேனா? கடுப்பான ரசிகர்கள்