டாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி!

புதன், 17 ஏப்ரல் 2019 (19:44 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியை சுரேஷ் ரெய்னா வழிநடத்தவுள்ளார். ஆச்சரியம் தரும் வகையில் தோனி இன்றைய போட்டியில் விளையாடவில்லை. 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சிஎஸ்கே அணி, தோனி இல்லாமல் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் வென்ற சிஎஸ்கே கேப்டன் சுரேஷ் ரெய்னா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் மைதானம் இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கு வசதியாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
இன்றைய சென்னை அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, சாம் பில்லிங்ஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கார்ன் ஷர்மா, தீபக் சாஹர், தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவுள்ளனர். சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக விளையாடவுள்ளார்.
 
இன்றைய ஐதராபாத் போட்டியில் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், விஜய்சங்கர், யூசூப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்குமார், கலீல் அஹ்மது, சந்தீப் ஷர்மா, ஷாபீஸ் நீடம்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு – கழட்டி விடப்பட்ட சாம் கரண் !