Publish Date: Sun, 14 Apr 2019 (19:48 IST)
Updated Date: Sun, 14 Apr 2019 (19:50 IST)
இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 161 ரன்களை எடுத்துள்ளது.
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சீராக விளையாடி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தனர். அதிகப்படியாக கிரிஸ் லின் 82 ரன்களை எடுத்தார்.
162 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தற்போது பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் பறிகொடுத்து 107 ரன்களுடன் விளையாடியது.
இதில் ரெய்னா 58 ரன்களும், டுபிளஸ் 29 ரன்களும்,ராயுடு 5 ரன்களும், ஜடேஜா 31 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் நரேன் 2 , சாவ்லா 2- 32 விக்கெட் எடுத்தனர்.
கடைசியாக 19.4 ஓவரில் சென்னை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 162 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.