Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னைக்கு வரும் சிஎஸ்கே அணி; அனுமதி அளிக்குமா தமிழக அரசு?

Advertiesment
சென்னைக்கு வரும் சிஎஸ்கே அணி; அனுமதி அளிக்குமா தமிழக அரசு?
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (15:07 IST)
நீண்ட நாட்களாக நடைபெறாமல் நிலுவையில் உள்ள ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் பயிற்சி எடுக்க தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் டி 20 போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது என்பது நடவாத காரியமாக ஆனது.

இந்நிலையில் ஐபிஎல்-ஐ தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளலாம் என பல நாடுகளும் அழைப்பு விடுத்த நிலையில் அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்காக அரபு அமீரகம் செல்வதற்கு முன்னால் இந்தியாவில் அனைத்து அணிகளும் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக ஆகஸ்டு 15 முதல் 21 வரை சென்னை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சிஎஸ்கே வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு அனுமதி அளிக்கும் நிலையில் 14ம் தேதியில் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருவார்கள் என்றும், ஆனால் பயிற்சி ஆட்டத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90ஸ் கிட்ஸின் ரெஸ்லிங் நாயகன் கமலா இறந்தார்! – சோகத்தில் ரசிகர்கள்!