Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (10:25 IST)
சென்னை வீரர் உடல்நிலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டூபிளஸ்சிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டூபிளஸ்சிஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்த போட்டியின் 7வது ஓவரில் கிளாடியேட்டர் அணியின் டேவிட் மில்லர் ஒரு பந்தை வேகமாக அடித்ததால் அந்த பந்து பவுண்டரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான டுப்லஸ்ஸிஸ் அதை தடுக்க ஓடினார். அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியது
 
இதில் டூபிளஸ்சிஸ்படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இனிவரும் போட்டியில் டூபிளஸ்சிஸ்க்கு பதிலாக வேறு வீரர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!

முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

நேற்றைய போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதைப் பெற்ற கோலி..!

அக்ஸர் படேலின் காலைத் தொடச் சென்ற விராட் கோலி.. ஓ இதுதான் காரணமா?

போட்டிய எல்லாம் ஜெயிச்சுடுறோம்… ஆனா டாஸ்தான்… உலக சாதனைப் படைத்த ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments