கடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கமும் புதிய சாதனையை படைத்துள்ளது.
	
 
									
										
								
																	
	
	கடந்த 2008ல் முதன்முதலாக ஐபிஎல் தொடங்கியது முதலாக அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஐபிஎல் ஆட்டத்தில் முதல் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்த சிஎஸ்கே கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை இழக்காமல் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே சமயம் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ஃபாலாவர்கள் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதுள்ள ஐபிஎல் அணிகளிலேயே அதிகமான ஃபாலோவர்களை கொண்ட ட்விட்டர் கணக்கு சிஎஸ்கேவுடையது ஆகும். இரண்டாவதாக 58 லட்சம் பாலோவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் கணக்கு உள்ளது.
 
									
										
			        							
								
																	அதிகமான பாலோவர்ஸ் சிஎஸ்கேவை விரும்புவதற்கு நன்றி தெரிவித்து சிஎஸ்கே வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.