இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.
ஷமி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் இந்த படிவத்தில் பிழைகள் செய்துள்ளதாக கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரில் வங்காள அணிக்காக விளையாடி வருவதால், தம்மால் நேரில் வர இயலாது என்றும், மாற்று தேதி வழங்குமாறும் ஷமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஜனவரி 9 அல்லது ஜனவரி 11 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷமி, கொல்கத்தாவில் வாக்காளர் பட்டியலில் எப்படி இணைந்தார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த
திட்டமிட்டுள்ளனர்.
Edited by Mahendran