சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருக் கொரோனா தொற்றினால் பல எழுபதுலட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ் மேனுமான அஃப்ரிடி கொரோனா தொற்றால் பாதிப்படுள்ளார் என்ற செய்திகள் வெளியான நிலையில், இதை அவரே உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் நான் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
அவரது ரசிகர்கள் இதனால் பெரிதும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அஃப்ரிடி பூரணம் குணமடைய பிராத்தனை செய்து வருகின்றனர்.