பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை பிரதமர் இம்ரான்கான் அடையை ஆசைப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா பெண்ணான சிந்தியா ரிச்சி என்பவர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ குறித்து ட்விட்டர் மூலமாக வெளியிட்ட அவதூறு பதிவு பாகிஸ்தான் அரசியல் வட்டத்தையே கலங்கடித்துள்ளது. அத்தோடு விடாமல் பேசி வீடியோ ஒன்றை ஷேர் செய்த அவர் 2011ம் ஆண்டில் பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டையும் வைத்தார்.
அத்தோடு இல்லாமல் பூட்டோ கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் யூசுப் கிலானி மற்றும் முன்னாள் அமைச்சர் மகதூம் சகாபுதீன் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து தன்னை உடல்ரீதியாக அணுகியதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரபலங்கள் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த சம்பவம் உலகம் முழுவதுமே உற்று நோக்கப்படுகிறது.
இந்நிலையில் சிந்தியாவின் நெருங்கிய நண்பரான நவாசிஷ் அலி என்ற டிவி தொகுப்பாளர் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்திற்கு அதிர்ச்சி தரும் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிந்தியாவும், அவரும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்கள். அந்த காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் தன்னுடன் செக்ஸ் வைத்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக சிந்தியா நவாசிஸிடம் கூறியுள்ளார். அதை நவாசிஸ் தற்போது வெளிப்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.