சாம்பியன்ஸ் டாப்பிய கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்னொரு அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
துபாய் மைதானத்தில் இன்று முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இரு அணிகளிலும் விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் இதோ:
இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ஆஸ்திரேலியா: கூப்பர், டிராவிஸ் ஹெட், ஸ்மித், லாபுசாஞ்சே, இங்லிஷ், அலெக்ஸ் கேர்ரி, மாக்ஸ்வெல், பென் டிவாரஷிஸ், நாதன் எல்லிஸ், ஜாம்பா, தன்வீர் சங்கா.