Publish Date: Tue, 04 Mar 2025 (12:24 IST)
Updated Date: Tue, 04 Mar 2025 (12:54 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்கின்றது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றது. அதன் பிறகு நடந்த எல்லா ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஆஸி அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத்தால் அந்த அணியும் கொஞ்சம் வலுவிழந்து உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டி குறித்து பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “எனக்கு மற்ற அணிகளிடம் அடிவாங்குவது கூட பயமில்லை. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் மஞ்சள் ஜெர்ஸி அணிந்தவர்களிடம் தோற்பது என்றால்தான் பயம்” எனக் கூறியுள்ளார்.