Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவ பணிகளுக்காக காஷ்மீர் போகிறார் தோனி – ரசிகர்கள் பதட்டம்

Advertiesment
Cricket News
, வியாழன், 25 ஜூலை 2019 (14:12 IST)
இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்று வரும் கிரிக்கெட் வீரர் தோனி ராணுவ பணிகளுக்காக காஷ்மீர் பகுதிக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட் இன்டீஸுடனான சுற்று பயண ஆட்டத்தை விடுத்து ராணுவ பயிற்சியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் தோனி. 2011 முதலே இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினெண்ட் பதவி வகித்து வருகிறார் டோனி. தற்போது ராணுவ பயிற்சியில் இணைந்த தோனி “பாராசூட்” பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். பயிற்சி முடிந்ததும் காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு அவரை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலுசிஸ்தான் மற்றும் ஆஸாத் காஷ்மீர் எல்லைப்பகுதிகளை ஒட்டி உள்ள காஷ்மீர் சமவெளி பகுதியில் உள்ள 106 பாராசூட் ரெஜிமெண்ட் குழுவில் அவர் இணைந்து ராணுவ பணியாற்ற போவதாக கூறப்படுகிறது.

நாட்டுக்காக ராணுவ பணியாற்றுவது தல தோனியின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மிகுந்த சந்தோஷமாய் இருந்தாலும், காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு செல்வது குறித்த சிறு கலக்கமும் இருப்பதாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோஃபாவில் சயனம்: மலைப்பாம்பை லாவகமாக பிடித்த நபர்!