Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

Siva
வியாழன், 29 மே 2025 (22:14 IST)
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற குவாலிபயர் ஒன்று போட்டியில், பெங்களூரு அணி மிக எளிதாக வெற்றி பெற்ற நிலையில், பஞ்சாப் அணி மிகவும் மோசமான தோல்வி அடைந்தது. இருப்பினும், அந்த அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மிகவும் மோசமாக பேட்டிங் செய்து, 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து, 102 என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வந்தது.
 
விராட் கோலி மற்றும் மயங்க் அகர்வால் விக்கெட்டுகள் சீக்கிரமே விழுந்துவிட்டாலும், தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் விளையாடி, இலக்கையை பத்து ஓவர்களில் எட்டினர். பத்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 106 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது என்பதும், சால்ட் 56 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, முதல் அணியாக பெங்களூரு பைனலுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில், நாளை குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, பஞ்சாப் அணியுடன் மோதும் என்பதும், அந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments