முன்னாள் தென்ஆப்பிரிக்க அணி தலைவர் ஏ.பி. டி வில்லியர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை விமர்சித்த வர்ணனையாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஐபிஎல் 2025 போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது பெங்களூரு அணியின் பவுலிங்கை கிண்டலடித்து பேசினதாக டி வில்லியர்ஸ் குற்றம்சாட்டினார்.
	 
	பீட்ஸ் எவ்வளவு சவாலானது என்று வர்ணனையாளர்கள் சொன்ன மாதிரி உண்மையாக இருந்திருந்தால், ரிஷப் பந்த் 61 பந்துகளில் 118 ரன்கள் அடிக்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
	 
	மேலும் வர்ணனையாளர்களின் கருத்துக்கள் என்னை எரிச்சலடைய வைத்தது. அவர்கள் நெகட்டிவாக பேசினார்கள். பெங்களூரு பவுலிங் பிரஷரில் உள்ளது, அவர்கள் மீண்டும் தோல்வி அடைய போகிறார்கள் என்றே பேசினர். ஆனால் ஒருமுறை யோசித்துப் பாருங்கள், அது ஒரு சிறந்த பேட்டிங் பீட்ஸாக இருக்க வாய்ப்பு இல்லையா? நீங்களே அவ்வளவு அறிவுள்ள வர்ணனையாளர்கள், ஒரு சிறந்த பேட்டிங் பீட்ஸ் இருந்திருக்கக்கூடாதா?"
	 
	“அவர்கள் தொடர்ந்து பெங்களூரு பவுலிங்கை  இருந்ததாகவே பேசினர். ஆனால் என்னை பொருத்தவரை வர்ணனையாளர்கள் ஒரு பக்கமாக பேசியதாக தெரிகிறது. . ஆம், பெங்களூரு இன்னும் ஒரு டைட்டிலை கூட வெல்லவில்லை என்பது உண்மைதான், ஆனால்  அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள், பவுலர்கள் மோசமாக செய்கிறார்கள் என்று சொல்வது சோம்பேறித்தனமாக இருக்கிறது.” என ஆவேசமாக பேசினார்கள்..