Webdunia - Bharat's app for daily news and videos

Install App

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

Siva
வியாழன், 29 மே 2025 (20:58 IST)
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே, குவாலிஃபயர்  போட்டி நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்த நிலையில், பஞ்சாப் அணி மோசமாக பேட்டிங் செய்து, குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர்களில் இருந்து இறுதி ஆட்டக்காரர்கள் வரை ஒருவர் கூட பொறுப்புடன் விளையாட வில்லை என்பதும், ஸ்டோனிஸ் மட்டுமே ஓரளவு தாக்குபிடித்து 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூர் தரப்பில், ஹாசில்வுட் மற்றும் சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுக்களையும், யாஷ் தயால் 2 விக்கெட்டுக்களையும், புவனேஷ் குமார் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில், 102 என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் நீண்ட பேட்டிங் வரிசையை வைத்துக் கொண்டு, மிக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கணிக்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments