Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசஷ் தொடர்: 67 ரன்கள் எடுத்து சொதப்பிய இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி

ஆசஷ் தொடர்: 67 ரன்கள் எடுத்து சொதப்பிய இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (21:05 IST)
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் எடுத்த உலகக் கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்து அணி இன்று திரில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது 
 
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் 179 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தது 
 
இதனை அடுத்து 246 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் எடுத்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணிக்கு 362 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது. இதனை அடுத்து வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 125.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் 135 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார் 
 
ஆட்டநாயகன் விருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த வெற்றியை அடுத்து இந்தத் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரோ கபடி போட்டி: டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி