பொதுவாக அனைவரின் காதுகளில் குறும்பைகள் இருக்கும் இது நாம் குளிக்கின்ற போது, அல்லது இன்னபிற சமயங்களில் காதை விட்டு வெளியேறிவிடும். ஆனால் காதை சுத்தப்ப்டுத்துகிறோம் என்ற பெயரில் பட்ஸை உபயோகித்து காது குடைவது போன்றவற்றால் நமக்கு நாமே தீங்கி விளைவித்துக்கொள்கிறோம்.
இதுபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜாஸ்மின் (37) என்ற பெண் தினமும் காதை சுத்தப்படுத்த பட்ஸை பயன்படுத்திவந்துள்ளார். இந்தப் பழக்கத்திற்கு இவர் அடிமையாகியுள்ளார். மேலும் இரவு நேரத்தில் காதுகுடைந்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒருமுறை இவருக்கு காது கேட்பதில் திடீரென பிரச்சனை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். இதற்கு காதில் நோய்த்தொற்று சம்பந்தமான மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை. பின்னர் அந்த மருத்துவர் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அனுப்பியுள்ளார்.
அப்போதுதான் ஜாஸ்மின் காதில் பட்ஸை உபயோகித்தால் காதுக்குள் ஏற்பட்ட நோய்த்தொற்று ஏற்பட்டு மண்டை ஓடு அரிக்கத்தொடங்ஜ்கி விட்டது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் உள்ள கிருமிகள் நீக்கப்பட்டு காதுதுவாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு காது கேட்கவில்லை. இதனால் தான் சந்திக்கும் அனைவருடமும் பட்ஸை உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திவருவதாக தகவல்கள் வெளியாகிறது.