இங்கிலாந்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால், விராட் கோலிக்கு சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் 14 ஆம் தேதி பெங்களூருவில் இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறது.
இந்தியாவுக்கு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டி விளையாட வரும்போது அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் இல்லாமல் இருந்தால், அது அந்த அணியை அவமானப்படுத்தும் செயல் என பிசிசிஐ கருதுகிறது.
ஆனால், விராட் கோலி ஆகஸ்ட் மாதம் துவங்கும் போட்டிக்கு தன்ன்னை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக கவுண்டி போட்டியில் விளையாட செல்கிறார். இதனால், ஆப்கானிஸ்தானுடான டெஸ்ட் போட்டியில் கோலி விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளதாவது, முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியில் விராட் கோலி விளையாடாமல் இருப்பது அந்த அணியை அவமதிப்பது போல் இருக்கும்.
எனவே, கோலி கவுண்டி சென்றாலும் உரிய அனுமதி பெற்று வந்து ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடவேண்டும். ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது என்றால் விளையாடாமல் இருப்பாரா.
எனவே, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி பங்கேற்க வலியுறுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.