Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்கு வீரர்களை புகழ்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிவிட்!

Advertiesment
நான்கு வீரர்களை புகழ்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிவிட்!
, திங்கள், 11 ஜனவரி 2021 (18:00 IST)
இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி சமன் செய்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் 403 ரன்களை துரத்திய இந்திய அணி 334 ரன்கள் சேர்த்து போட்டியை டிரா செய்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய பேட்ஸ்மேன்களான புஜாரா, பண்ட், விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ட்ரா செய்தது. ரிஷப் பண்ட் மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி டிரா ஆக சிறப்பாக விளையாடிய புஜாரா, பண்ட், ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரை பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளர். அதில் ‘இவர்கள் நான்கு பேரும் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இந்தியா சிறப்பாக செயல்பட்டது. தொடரை வெல்வதற்கான சிறப்பான நேரம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த டிராவை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை – ஆஸி கேப்டன் டிம் பெய்ன்!