இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் இதயக்குழாய்களில் முன்று அடைப்புகள் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் அமீரகத்தில் கொரோனா காலத்திலும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனைகளில் அவரின் இதயத்துக்கு செல்லும் குழாய்களில் 3 அடைப்புகள் இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கங்குலியை நேரில் சென்று நலம் விசாரித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடியும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.