Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.பி.எல்லில் முதலீடு.. பிசிசிஐயில் கிட் ஸ்பான்சர்! – சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி!

எம்.பி.எல்லில் முதலீடு.. பிசிசிஐயில் கிட் ஸ்பான்சர்! – சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி!
, புதன், 6 ஜனவரி 2021 (14:52 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலீடு செய்துள்ள நிறுவனத்திற்கு கிட் ஸ்பான்சர் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கிரிக்கெட் கிட் ஸ்பான்சராக எம்.பி.எல் மொபைல் கேம் நிறுவனம் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய போட்டிகள் முதற்கொண்டு அனைத்திலும் இந்திய அணி வீரர்கள் அணிந்திருந்த உடையில் எம்பிஎல் லோகோ இடம் பெற்றுள்ளது. பிசிசிஐயின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் கடந்த நவம்பர் 17,2020ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னால் 2019ல் எம்பிஎல் நிறுவனத்தின் பங்குகளில் கேபட்ன் விராட் கோலி முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது அணி வீரர்கள் முதலீடு மற்றும் ஸ்பான்சர் மூலம் இரட்டை ஆதாயம் அடையும் வழி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விராட் கோலி முதலீடு செய்த நிறுவனம் அவரது மறைமுகமான பரிந்துரையின் பேரில் பிசிசிஐ கிட் மற்றும் மெர்க்கண்டைல் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என சர்ச்சை எழுந்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது டெஸ்ட்: ஆடும் 11 அணியில் நடராஜன் பெயர் இல்லை!