Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2019ன் சிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ்! – பிபிசி விருது!

Advertiesment
2019ன் சிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ்! – பிபிசி விருது!
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (16:23 IST)
2019ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் பல்வேறு ஊடகங்கள் 2019ம் ஆண்டின் சிறந்த நபர்களுக்கு விருதுகளை வழங்கி வருகின்றன.

பிரபல பிபிசி ஊடகம் உலகளவில் ஆண்டு தோறும் சாதனை படைக்கும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த 2019ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கியுள்ளது.

இங்கிலாந்து பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை போட்டிகளில் பலரால் கவனிக்கப்பட்டவர். முக்கியமாக உலக கோப்பை இறுதியில் நியூஸிலாந்து – இங்கிலாந்து இடையே நடைபெற்ற வலுவான போட்டியில் 84 ரன்கள் அடித்த பென் ஸ்டோக்ஸ் அன்றைய நாள் போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூஸிலாந்துடனான இறுதி ஆட்டத்தில் ரன் எடுக்க ஓடி வரும்போது பேட்டால் பந்தை தட்டியதில் ஒரு பவுண்டரி கூடுதலாக சென்றது. அந்த ரன் கணக்கில் சேர்க்கப்பட்டதால் நியூஸிலாந்துக்கு நிகரான ரன்களை இங்கிலாந்து பெற்றது. தான் வெற்றிபெற்ற போதும் தான் செய்த தவறுக்காக நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்பதாக வருத்தத்துடன் கூறினாட் பென் ஸ்டோக்ஸ்.

அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்படிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிக்ஸ் பண்ணிக்கோ... ஐபிஎல் ஏல ஷெட்யூலில் நோ சேஞ்சஸ்!!