ஐபிஎல் ஏலம் சொன்ன தேதியில், சொன்ன இடத்தில் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப் பட்டதை அடுத்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக மம்தா பானர்ஜியும் தெருக்களில் போராட்டத்தில் இறங்கினார். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. எனவே, ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தற்போது விடையும் கிடைத்துள்ளது.
ஆம், திட்டமிட்ட தேதியிலேயே ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தினர் இன்று கொல்கத்தா செல்லும் நிலையில், மற்ற அணி நிர்வாகிகள் அடுத்தடுத்த தினங்களில் செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
கங்குலி பிசிசிஐ தலைவராக ஆனபின்னர் நடக்கும் முதல் ஏலம் என்பதால், 29 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 73 வீரர்கள் இடங்களுக்கு ஐபிஎல் 2020 ஏலம் கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.