ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சதம் அடித்து அசத்தினர். டிராவிஸ் ஹெட் 142 ரன்களும், அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் 100 ரன்களும், கேமரூன் கிரீன் 118 ரன்களும் எடுத்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் குவித்தது. இறுதி கட்டத்தில், அலெக்ஸ் கேரி 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.
432 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 12 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.