டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அஸ்வின் தனது ஜெர்ஸ் எண்ணை மாற்றியுள்ளார்.
டெல்லி அணிக்காக விளையாடும் அஸ்வின் இந்த சீசனில் தனது ஜெர்ஸி எண்ணாக 999 என்பதைக் கொண்டு விளையாடி வந்தார். இந்நிலையில் திடீரென இப்போது அதை 99 என மாற்றி விளையாட ஆரம்பித்துள்ளார். இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இதற்கானக் காரணம் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் அமித மிஸ்ரா ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் இதுவரை 99 என்ற ஜெர்ஸி எண்ணைப் பயன்படுத்தி வந்தார். இப்போது அவர் விலகி விட்டதால் அஸ்வின் அதைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளாராம்.