Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30 ஆண்டுகளுக்கு பிறகு நண்பருடன் இணைந்த சச்சின்!!

30 ஆண்டுகளுக்கு பிறகு நண்பருடன் இணைந்த சச்சின்!!
, வியாழன், 26 அக்டோபர் 2017 (19:17 IST)
30 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் தனது பாலிய நண்பரான வினோத் காம்ப்ளியுடன் தனது நட்பை புதுப்பித்துள்ளார். 


 
 
மும்பையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற டெமாக்ரசி 11 - தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
 
இந்த சந்திப்பு இனிதாக இருந்ததாக் காம்ப்ளி மகிழ்ச்சியாக டிவிட்டரில் எழுதி இருக்கிறார். சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான சாதனையாக கருதப்படுவது அவர் பள்ளி பருவத்தில் செய்த ஒரு சாதனைதான். 
 
பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் சச்சினும், காம்ப்ளியும் ஒன்றாக இணைத்து 664 ரன்கள் அடித்தனர். அந்த போட்டி சச்சினின் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
 
ஆனால், காம்ப்ளி கிரிக்கெட்டில் போதிய கவனம் செலுத்தாமல் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து சச்சினுக்கும் காம்ப்ளிக்கும் இடையில் நிறைய இடைவெளி ஏற்பட்டது.
 
சச்சின் என்னை மறந்து விட்டார் என காம்ப்ளி பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார். அவர் எழுதிய புத்தகத்தில் சச்சினை பற்றி குறிப்பிடாமல் தவிர்த்தார். சச்சின் மேல் சற்று கோபமாகவே இருந்தார். இந்நிலையில் இருவரது மனகசப்பு இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தீர்ந்துப்போனது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியை தக்க வைத்துகொள்ளுமா சிஎஸ்கே??