ஆதார் எண்ணுடன் சில ஆவணங்களை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இணைப்பிற்கும் கால அவகாசத்தை நீடித்துள்ளது.
ஆதார் எண்ணுடன் இந்த ஆவணங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இணைக்க பல வழிமுறைகளையும் அரசு செய்துள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
# வங்கி கணக்குகள்
# பான் கார்டு
# வாக்காளர் அடையாள அட்டை
# எல்பிஜி கேஸ் இணைப்பு
# டிரைவிங் லைசென்ஸ்
# மொபைல் எண்
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க நெட் பேங்கிக் வசதி இருக்க வேண்டும். இது ஆன்லைன் பணப்பறிமாற்றத்தை பாதுகாப்பானதாக வைக்க உதவும் என கூறப்படுகிறது.
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்தால் போலி பான் எண் கொண்டவர்களை கண்டுபிடிக்கவும், வருமான வரி தாக்களுக்கும் அவசியமாக கருதப்படுகிறது.
சமையல் எரிவாயு மானியத்தை பெற ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் சமீபத்தில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.