Publish Date: Wed, 25 Oct 2017 (17:11 IST)
Updated Date: Fri, 13 Apr 2018 (19:51 IST)
மந்திய மாநில அரசின் நல திட்டங்களையும், சலுகைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவித்திருந்தது. தற்போது ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது.
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை ஆதார் எண்னோடு இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீடித்துள்ளது.
ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக எழும் புகார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.