Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் கேரியர் சிறந்த முடிவை எட்ட அது நடக்கவேண்டும் – டிவில்லியர்ஸ் ஆசை!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2025 (15:35 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்தும் ஒன்றும் இரண்டுமாக ஓடி சேர்த்ததுதான்.

கோலி மிகவும் ஃபார்முக்கு வந்துள்ளதால் ஆர் சி பி ரசிகர்கள்தான் அதிக குஷியாகியுள்ளார்கள். ஏனென்றால் இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் கோலியோடு இணைந்து விளையாடிய டிவில்லியர்ஸ் கோலி பற்றி பேசும்போது “ஆர் சி பி அணி கோப்பையை வெல்வதுதான் கோலியின் அற்புதமான கேரியருக்கு நல்ல முடிவாக இருக்கும்.” எனப் பேசியுள்ளார். இந்த முறையாவது ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த ரசிகர்களிடம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments