Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவு… இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (15:27 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.

இதனால் இந்திய அணியோடு இந்த தொடரில் விளையாடிய பாகிஸ்தான், பங்களாதேஷ், நியுசிலாந்து மற்றும ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பாகிஸ்தானில் இருந்து  துபாய்க்கு வந்து இந்தியாவோடு விளையாடி பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று மற்ற போட்டிகளில் விளையாடின. இந்த தொடருக்காக இந்திய அணி ஒரு கிலோ மீட்டர் கூட பயணம் செய்யவில்லை. அதே நேரம் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட 7048 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இதற்கிடையில் நியுசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி தோள்பட்டைக் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments