Publish Date: Fri, 13 Jun 2025 (17:52 IST)
Updated Date: Fri, 13 Jun 2025 (17:53 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப்' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் படுதோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்த படம் வெறும் 40 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாகவும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் 150 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கிய நிலையில், தற்போது தொகையை குறைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த படத்தால் கமல்ஹாசனுக்கும், மணிரத்னத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், கமல்ஹாசனின் அடுத்த படமான 'அன்பறிவ் இயக்கும் படம் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
ஆனால், ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, "கண்டிப்பாக கமல் - அன்பறிவ் படம் உருவாகும் என்றும், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும்" கூறியுள்ளனர். எனவே, கமல் நடிக்கும் அன்பறிவ் படம் நிறுத்தப்பட்டது என்பது முழுக்க முழுக்க வதந்தியே என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.