Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சகல பாவங்களையும் போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு !!

Advertiesment
சகல பாவங்களையும் போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு !!
பிரதோஷ வேளையில் நந்திக்குத் தனி சிறப்பு உண்டு. இந்த வேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்க வேண்டும்.

சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திரு விளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக் கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப் பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், ஈசனின் நடனத்தை தேவர்கள் கண்டு களித்தார்களாம். இதையொட்டியே, பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவபெரு மானை தரிசிக்கிறோம்.
 
இந்த வேளையில் அறுகம்புல்லை மாலையாக கட்டி நந்திக்குச் சாற்றவேண்டும். வில்வம், மருக்கொழுந்து, மல்லிகை ஆகிய மலர்களாலும் அலங்காரம் செய்வார்கள்.
 
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களு ம் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத் தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
 
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.
 
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஞ்சநேயர் பெற்ற வரங்கள் பற்றி அறிவோம்