Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன பரிகாரம் தெரியுமா...?

சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன பரிகாரம் தெரியுமா...?
சனி பகவானால் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருக்க இதை மட்டும் செய்தாலே போதும். உங்களைத் தேடி வந்து அந்த சனி பகவானே கஷ்டத்தை தீர்த்து வைப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டதை நிர்ணயிப்பது இந்த ஜாதக கட்டங்கள் தான். ஜாதக கட்டத்தில் இருக்கும் நவகிரகங்கள் தான் நம்முடைய தலையெழுத்து. எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கிரகங்கள் தீமை மட்டுமே செய்யாது. 
 
ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் அதிக கஷ்டம் வருவதற்கு முழு முதற்காரணமாக இருப்பது குரு பகவானும், சனி பகவானும் என்று கூட சொல்லலாம். குரு திசை நடக்கும் சமயத்தில் கட்டாயம் சில கஷ்டங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதேபோல்தான் ஏழரை சனி நடக்கும் போதும், சனி திசை நடக்கும் போதும் சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அதை நம்மால் தடுக்க முடியாது. இருப்பினும் அந்த கஷ்டங்களிலிருந்து சுலபமாக எப்படி வெளிவருவது என்பதைப் பற்றிய சில பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்து தான் சென்றுள்ளார்கள்.
 
முதலில் குருபகவானால் பிரச்சனைகள் வராமலிருக்க குரு பகவானை சாந்தி செய்ய என்ன பரிகாரம் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். வியாழக்கிழமைகளில் மகான்களுடைய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சீரடி பாபா அவர்களுக்கு வியாழக்கிழமைதோறும் எலுமிச்சம்பழ சாதத்தை நிவேதனமாக வைத்து பூஜை செய்து, அந்த எலுமிச்சம்பழ சாதத்தை ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். 
 
அடுத்தபடியாக சனி பகவானால் பாதிப்பு உள்ளவர்கள், அஷ்டம சனி ஏழரை சனி இப்படி சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வராமல் இருக்க, வெளியில் சென்று வீட்டுக்குள் நுழையும் போது, வாசலிலேயே பின்னங்கால் நனையும்படி பாதங்களை நன்றாக கழுவி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும். 
 
வாரத்தில் ஒருநாள் நல்லெண்ணெய் தேய்த்து தலை ஸ்னானம் செய்து கொள்ள வேண்டும். நவகிரக சந்நிதியில் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தேனி மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சென்று சனிபகவானை முறைப்படி வழிபாடு செய்துவிட்டு வந்தால், சனிபகவானால் ஏற்படும் பிரச்சனைகள் வாழ்க்கையில் படிப்படியாக குறையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் 2021 - 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...