Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலம்புரி சங்கை வைத்து முறையான பூஜைகள் செய்து வழிபாடு !!

Advertiesment
வலம்புரி சங்கை வைத்து முறையான பூஜைகள் செய்து வழிபாடு !!
வலம்புரி சங்கை வீட்டில் வைப்பவர்கள் முறையான பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் அவர்களுக்கு கைகூடும்.

வலம்புரி சங்கை பொருத்தவரை தாராளமாக வீட்டில் வைக்கலாம். அதில் சிறிதளவு நீர் ஊற்றி தங்கம், செம்பு, வெள்ளி ஆகிய ஏதேனும் ஒரு உலோகத்தின் மீது  அல்லது மரத்தால் செய்த பொருளின் மீது வைக்க வேண்டும் வெறும் தரையில் படும்படி கீழே வைக்கக்கூடாது. 
 
வலம்புரி சங்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த தோஷமும் நெருங்காமல், துர்சக்திகள் அண்டாமல் மற்றவர்களின் பொறாமை கண்கள் நம் மீது படாமல் இருப்பதற்கு  துணையாக இருக்கும் என்பார்கள்.
 
செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்கள் 6 செவ்வாய்க்கிழமைகள், செவ்வாய் பகவானை வணங்கி, வலம்புரி சங்கில் பால் வைத்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து செவ்வாய் பகவானுடைய 108 அஷ்டோத்திரம் கூறினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 
 
பச்சிளம் குழந்தை தொடர்ந்து பாலை அருந்தாமல் அழுது கொண்டே இருந்தால் பிள்ளையாரை வணங்கிவிட்டு தாய்ப்பாலை சங்கில் ஊற்றி கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பவுர்ணமியின் இரவு நேரத்தில் இல்லத்தின் வாசலில் 16 சங்கு வருமாறு கோலம் போட வேண்டும். பின்னால் வலம்புரி சங்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்யவேண்டும். அதன்பின் குளிகை நேரம் காலண்டரில் பார்த்து கடன் தொகையில் இருந்து ஒரு தொகையை  கொடுத்து விட்டு வந்தால் மொத்த கடனும் அதிவிரைவாக அடைந்து விடும் என்பது நம்பிக்கை.
 
உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருக்கும் தெய்வத்தின் படமும், லக்ஷ்மி குபேரன் படம் மற்றும் யோக எண்ணையும் வைத்து சில சில்லறை நாணயங்களை வலம்புரி சங்கில் போட்டு பூஜை செய்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் கூடும். 
 
கோவில்களில் இடம்புரி சங்கு நீர்விட்டு 108, 1008 சங்காபிஷேகம் நடைபெறும் வேளையில் கலந்து கொள்பவர்களுக்கு தோஷங்கள் விலகி, அதிக அளவில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துளசியின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்...!!