Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியனை வணங்குவதால் ஏற்படும் அற்புத பலன்கள் !!

Advertiesment
சூரியனை வணங்குவதால் ஏற்படும் அற்புத பலன்கள் !!
சூரியனை வணங்குவதால் ஏற்படும் அதிசயம் - புராணம் காட்டும் ஆச்சர்ய உதாரணம். ஆதித்ய ஹரிதயம் என்பது சூரியனை போற்றி வழிபடும் ஸ்லோகமாகும். சமஸ்கரித்தல் உள்ள இந்த ஸ்லோகங்கள் ஆதித்யனான சூரியனின் பெருமைகளை சொல்லற்கரியது. 

இந்த ஆதித்ய ஹரிதயம் படிப்பதால் எதிரிகள் தொல்லை அறவே நீங்கும். அரசாங்க காரியங்கள் தடை இன்றி நடக்கும். இந்த ஆதித்ய ஹரிதயத்தை ஓதினால் எண்ணற்ற பயன்களை பெறலாம் என்று ஞானியரகள் காலம் காலமாக கூறி வருகின்றனர். 
 
ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருப்பவர்கள் சூரியன் பலம் இழந்து இருப்பவர்கள் இந்த ஆதித்ய ஹரிதாயத்தை தினமும் படித்தால் சூரியனால் வரும் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
 
சூரியபகவான் மட்டுமே நம்முடைய கண்களுக்கு தெளிவாக தெரியும் தெய்வமாவார். அதனால் அவரை வணங்குவது அதிக சிறப்பை தரும். சூரிய பகவானின் அருளை பெரும் பல வழிகளில் இந்த ஆதித்ய ஹரிதாயத்தை படிப்பதும் ஒன்றாகும்.
 
இராமாயணத்தில் ராம ராவண யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருத்தபோது இருவரும் சம பலம் கொண்டவர்களாக கடும் யுத்தத்தில் ஈடுபட்டனர்.  ராமன் எவ்வளவோ முயன்றும் ராவணனை கொல்ல முடியாமல் தடுமாறுகிறார், இந்த ராவணனை கொள்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் தவித்த போது  அகத்தியர் அவர் முன்னே தோன்றி ஒரு உபாயத்தை சொல்கிறார். 
 
அவர் ராமனின் முன் நின்றவாறு ஆதித்ய ஹரிதாயம் எனும் மந்திரத்தை உபதேசிக்கிறார். சூரியனை குறித்த இந்த துதி விஷேஷ மந்திரங்கள் அடங்கியது. இந்த துதியை ராமன் போர்க்களத்திலேயே முறையாக அமர்ந்து ஆசமனம் செய்து மூன்றுமுறை மன ஒருமைப்பாட்டுடன் ஓதி விட்டு பிறகு தன் போரை தொடர்ந்தார். 
 
அப்போது ராமன் வழக்கமாக குறி வைக்கும் இடத்தை மாற்றி ராவணனின் நாபியில் பகுதியில் குறி வைத்து அம்பை எய்தார். அது அதிவேகமாக சென்று  ராவணனின் உயிரை எடுத்து வந்தது பிறகு 10 பாணங்களால் 10 தலைகளையும் 20 பாணங்களால் இருபது கைகளையும் ராமன் அறுத்து வீழ்த்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-08-2020)!