Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்தெந்த தெய்வத்துக்கு என்னென்ன மலர்கள் உகந்தவை....?

எந்தெந்த தெய்வத்துக்கு என்னென்ன மலர்கள் உகந்தவை....?
ஒவ்வொரு இறைவனுக்கும் இந்தந்த மலர்களைதான் சமர்பிக்க வேண்டும் என நியதி இருக்கின்றது. பெண் தெய்வங்கள் சிலவற்றிற்கு எந்த மலர்களை சமர்பிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
தேவி சரஸ்வதி:
 
இவருக்கு வெள்ளை தாமரை மற்றும் மற்ற வெள்ளை நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லது. இவருக்கு நறுமணம் கமழும் பூக்களான  குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.பாலாசம் பூக்கள் கூட இவருக்கு விருப்பமான ஒன்றாகும்.  அதைக் கொண்டும் சரஸ்வதி தேவிக்கு வழிபாடு செய்யலாம்.
 
தேவி துர்கா:
 
இவருக்கு பொதுவாக சிவப்பு நிற ஆடைகளை அணிவித்து, சிவப்பு செம்பருத்தி, சிவப்பு செவ்வரளி, சிவப்பு தாமரை மற்றும் மற்ற சிவப்பு நிற  மலர்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம். மேலும், சங்கு புஷ்பம் தேவி துர்காவிற்கு விருப்பமான மலராகும். இந்த மலரிற்கு அபரஜித்தா  என்ற பெயரும் உண்டு. இதற்கு எவரும் வீழ்த்த முடியாதவர் என்று பொருளாகும். இந்த சங்கு புஷ்பம் நான்கு வண்ணங்களில் காணப்படுகிறது.  வெள்ளை, பழுப்பு ஊதா நிறம், லேசான நீல நிறம், ராயல் புளூ கலர் என்ற நிறங்களில் காணப்படுகிறது. கடம்பு மலர் மற்றொரு விருப்பமான  மலராக உள்ளது.
 
தேவி காளி:
 
இவருக்கு சிவப்பு நிற செம்பருத்தி, மஞ்சள் அரளிப் பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.
 
தேவி லட்சுமி:
 
இவருக்கு தாமரை மிகவும் பிடித்தமான பூவாகும். இவர் கடவுள் விஷ்ணுவை மணந்து கொண்டார். அவரும் தாமரைமீது வீற்றிருந்து காட்சி  அளிப்பவர். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி பூக்கள் போன்றவற்றை கொண்டு இவருக்கு பூஜிக்கலாம்.
 
தேவி பார்வதி:
 
இவருக்கும் சிவப்பு நிற மலர்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் செம்பருத்தி, தாமரை மிகவும் விருப்பமானது. மேலும் மற்ற பூக்களான சம்பங்கி பூ, குண்டு மல்லி, ஆரஞ்சு வண்ண பாலாசம் பூக்கள் போன்றவை இவருக்கு படைக்க சிறப்பான பூக்களாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமேஸ்வர கடலில் அலை அடிப்பதில்லை; இதற்கான காரணம் என்ன தெரியுமா....?