Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவ்வரளி மலர் எந்த தெய்வங்களுக்கு உகந்தது தெரியுமா?

Advertiesment
செவ்வரளி மலர் எந்த தெய்வங்களுக்கு உகந்தது தெரியுமா?
செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் செவ்வரளி மலர் அணிவித்து அனுகிரகம் பெறலாம். செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் செவ்வரளி மாலை பைரவருக்கு மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளை பழம் நிவேதனம்  செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடைய உறவு வலுப்படும். 
பஞ்சமி அஷ்டமி திதியில் வாராகி அம்மனுக்கு இம்மலரை பயன்படுத்தலாம் மிக நல்ல பலன் கிடைக்கும். பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. உக்ரமலர் என்பதால் தெய்வம் பார்த்து சூட்ட வேண்டும்.
 
ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம். அமாவாசை, பௌர்ணமி, திங்கள் கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். 
 
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம். எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும். கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி  சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.
webdunia
பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது. தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது  பரிகாரமாக இருக்க வேண்டும்.
 
செவ்வரளி செடியை வீட்டினில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும். ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க ஆரம்பிப்போம் கவனம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா....?