Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் ஏன் தெரியுமா...?

கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் ஏன் தெரியுமா...?
கடவுளுக்கு மிக நெருக்கமான விடயம் பூக்கள் என்று கருதுகிறோம். அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும்  குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.
விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே  பயன்படுத்தப்படுகிறது.
 
முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம்.
 
துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.
 
அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால்  அர்ச்சனை செய்யப்படும்.
 
விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும். பூக்களால் அர்சனை செய்வதால் நமக்கு எண்ணிட முடியா பலன்கள் கிடைக்கும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.
 
தாமரை மலர்கள் தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது. முல்லை மற்றும் மல்லிகை  பூக்கள் புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.
 
துளசியை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அதன் தெய்வீகத்தன்மையும் பக்தியும் நாம் அறிந்ததே. நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.
 
எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தைதந்து தியான உணர்வை வளர்க்கும். நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும் விருப்பங்கள் நிறைவேறவும் பவள மல்லி பூக்கள் உதவும்.
 
நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். செம்பருத்தி, அரளி ஆகிய இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன்நெறிக்கு இட்டு செல்கிறது. நந்தியாவட்டப் பூக்கள் பணம், பொருள் தேவையை  நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படியெல்லாம் தெருக்குத்து வரும்? தெருக்குத்து தீய விளைவுகளை ஏற்படுத்துமா...?