Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?

Advertiesment
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?
செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
 
செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.
 
கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
 
செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.
 
செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம்.
 
இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.
 
செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இவ்வாறு செய்வதால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் !!