Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில் சென்று வழிபடுவோர் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் !!

கோவில் சென்று வழிபடுவோர் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் !!
ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்க்கவேண்டும். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
 
பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 5-7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குலதெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
 
தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
 
சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
 
பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும். ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
 
பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது. 
 
முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
 
தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும். தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ராட்சம் அணிவதால் என்ன பலன்கள் தெரியுமா...?