Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பகவத் கீதையில் குலதெய்வ வழிபாடு பற்றி கூறுவதென்ன...?

Advertiesment
பகவத் கீதையில் குலதெய்வ வழிபாடு பற்றி கூறுவதென்ன...?
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
 
குலதெய்வ வழிபாடு:
 
குலதெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் என்னவெனில், யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி  நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
 
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார்.  வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே குலதேவதையை  ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித துறவியாக போற்றப்படும் ஷீர்டி பாபா